புனேயில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்து கோர விபத்து; 15 பேர் பலி

புனேயில் கொட்டித் தீர்த்த கனமழையில் அடுக்குமாடி குடியிருப்பின் வளாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகினர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன. அங்கு முழுவீச்சில் மீட்பு பணி நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஆண்டுதோறும் ஜூன் 10-ம் தேதிக்கு முன்பாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளா உட்பட பிற மாநிலங்களிலும் பருவமழை தாமதமாகவே தொடங்கியது.

இதனால், இரண்டு வாரங்கள் தாமதமாக அங்கு நேற்று பருவமழை தொடங்கி உள்ளது. மும்பையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.  குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மும்பை மட்டுமின்றி புனே உட்பட மற்ற நகரங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. புனேயில் நேற்று  மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றன.

புனே அருகே உள்ள கொந்த்வா என்ற இடத்தில்  குடியிருப்பு கட்டிடத்தின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த குடிசைகளும் இடிந்து விழுந்தன.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் சிக்கி பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் குடிசை பகுதியில் வசித்த மக்கள் ஆவர். அடுக்குமாடி குடியிருப்பு வளாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது, வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களும் சிக்கின. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here