ஆர்னோல்ட், சத்தியலிங்கத்துடன் சாப்பிட 100 டொலராம்: கனடாக்காரரின் குசும்பு!

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டுக்கு ரூ.5 கோடி நிதி வழங்குவதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7ம் திகதி வரை உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது. சர்வதேச தமிழாய்வு சங்கம் என்ற அமைப்பு இம் மாநாட்டை நடத்துகின்றனர்.

இதன் இணை அமைப்பாளர்களாக வட அமெரிக்காவின் தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை உள்ளன. இந்த மாநாட்டிற்கு கடந்த ஒன்பது முறையாக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. இந் நிலையில், இந்த 10வது மாநாட்டுக்கும் ரூ.5 கோடி நிதி வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

ஆனால், இந்த மாநாடு சிகாகோவில் நடைபெறுவதால் அதற்கு நிதி வழங்க, மத்திய வெளியுறவுத் துறை அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு சார்பில் பலமுறை கேட்கப்பட்டும், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க அனுமதி பெற்ற 7 பேர் உள்ளிட்ட 40 பேர் நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கோரியும் இதுவரை சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்கவில்லை.

இதேவேளை, இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தமிழரசுக்கட்சி வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் மூலம், யாழ் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆர்னோல்ட்டை தமிழ் மாநாட்டிற்கு அழைத்தது பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த மாநாட்டிற்கு செல்லும் ஆர்னோல்ட், பயணச்செலவை மாநகரசபையே ஏற்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்கா செல்லும் ஆர்னோல்ட் கனடாவிற்கும் சுற்றுலா செல்கிறார். அங்கு, கனடிய தமிழ் அரசு கட்சி கிளை இராப்போசன விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆர்னோல்ட்டுடன் உணவருந்துவதற்கு ஒவ்வொருவரும் 100 டொலர் டிக்கட் எடுக்க வேண்டுமென தமிழ் அரசு கட்சி கிளை அறிவித்துள்ளது.

கனடிய தமிழ் அரசு கட்சி கிளை பணத்தை வழங்கி, தமிழ் அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக தாயகத்தில் விமர்சனங்கள் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அனைத்தின் பின்னணியிலும் பணத்தை வாரியிறைக்கும் கனடா கிளை பின்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையில் முன்னாள முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கனடா களையால் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான வரைபு கனடாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பில் விக்னேஸ்வரனை நீக்கிவிட்டு, ப.சத்தியலிங்கத்தை முதலமைச்சராக்குகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கும் முறை அதுவல்லவென குறிப்பிட்டு மாவை சேனாதிராசா அந்த வரைபை கசக்கி எறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பை கனடா கிளை ஆதரித்து வருகிறது. இந்த தரப்பின் ஆர்னோல்ட், ப.சத்தியலிங்கம் ஆகிய இருவரையும் இம்முறையும் கனடாவிற்கு அவர்கள் அழைத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here