தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு இன்று!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய நிர்வாக தெரிவுகள் இன்று இடம்பெறவுள்ளன.

நீண்டகாலத்தின் பின்னர் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மத்திய செயற்குழு, பொதுச்சபை, வாலிபர் முன்னணி, மகளிர் அணி கூட்டங்கள் நேற்றும் இன்றும் நடக்கின்றன.

நேற்று மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது. இதன்போது, அதிரடியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாததால் கட்சியின் தலைவர், செயலாளர் பதவிகளில் மாற்றமில்லையென தெரிகிறது.

துணைப்பொதுச்செயலாளர்கள் ஐவர், மத்திய செயற்குழு உள்ளிட்டவற்றிற்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் பொதுச்சபை கூட்டம் இடம்பெறுகிறது. மாவட்டம் தோறும் 5 பிரதிநிதிகள் வீதம் சுமார் 130 வரையானவர்கள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு வாலிபர் முன்னணி கூட்டமும், மாலை 5 மணிக்கு மகளிர் அணி கூட்டமும் இடம்பெறும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here