காதிற்குள் குடியிருந்த பல்லி: மருத்துவர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து இரண்டு நாட்களாக காது வலி ஏற்பட்ட ஒருவர், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் காதிற்குள் பல்லி குடியிருந்த விசயம் தெரிய வந்துள்ளது..

தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்தது. வாரண்ய நங்கந்தவி (25) என்ற வைத்தியரே பரிசோதனையை மேற்கொண்டவர். இப்படியொரு சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லையென மிரண்டு போயிருக்கிறார்.

“நான் மேற்கொண்ட அந்நாளின் கடைசிச் சிகிச்சை அது. பெரிய பல்லி காதுக்குள் புகுந்துள்ளது எப்படி சாத்தியமாகும்?. நான் உண்மையிலேயே குழம்பி போனேன்.”
என்று அவர் அப்படத்தை முகநூலில் பதிவிட்டுருந்தார்.

மயக்க மருந்திட்டு, பல்லியை வெளியே எடுத்த போதிலும், அதன் வால் பகுதிகள் சில காதிற்குள் சிக்கியிருக்கலாமென்ற அச்சத்தால், நோயாளியை மூக்கு மற்றும் தொண்டை நிபுணரிடம் (ENT) அழைத்து சென்றுள்ளார்.

பல்லியின் வால் பகுதிகள் அங்கு சிக்கியிருந்தது தெரிய வந்ததாகவும், இருப்பினும் துணிச்சல்மிக்க செயலை செய்தமைக்கு தம்மை அவர் பாராட்டியதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டு இருந்தார்

தாய்லாந்தில் “ஜிங் ஜோக்” ரக வீட்டுப் பல்லிகள் அதிகம் தென்பட்டாலும், அம்மாதிரியான பல்லி எப்படி 48 மணிநேரம் காதுக்குள் இருந்தது என்ற கேள்விக்கு அம்மருத்துவரால் விடையளிக்க முடியவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here