நடிகர் விஷ்ணு விஷால் வீட்டிலேயே குடியேறிய காதலி ஜுவாலா!

எனக்கு ஜூவாலா கட்டாவையும் பிடிக்கும். அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என்று நடிகர் விஷ்ணு விஷால் கொஞ்சம் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்லை பாஸ், நாங்க ஒன்னாதான் இருக்கம் என்பது போல் ஒரு டுவிட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா.

நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். அவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால் பட்மிண்டன் வீராங்கனை ஜூவாலாவுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து விஷ்ணு விஷால் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காக தான் மனைவியை பிரிந்தார் என்ற செய்திகள் பரவின. இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் எனக்கு ஜூவாலாவைப் பிடிக்கும். அவருக்கும் என்னை பிடிக்கும். எனக்கும் அவரை ஓராண்டு காலமாக தெரியும் .

இருவரும் பொதுவான நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். எங்கள் நட்பு அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு திருமணத்தை நோக்கி செல்லுமா என்பது இப்போது சொல்ல முடியாது. நாங்கள் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்படிப்பட்ட குழப்பம் எல்லாம் தேவையில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், சென்னையில் என்ற பதிலோடு விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஜூவாலா.

கல்யாண சாப்பாடு போடுகிற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா பாஸ்? இப்படியே லிவிங் டுகெதரில் செட்டில் ஆகிவிடுவீர்களா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here