தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது!

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்தது.

கட்சியின் தற்போதைய மத்தியகுழுவின் இறுதிக் கூட்டம் இதுவாகும். நாளை செயற்குழுவில் புதிய மத்தியகுழு தெரிவாகும்.

இன்று மாலை 4 மணிக்கு மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி தலைமையகத்தில் ஆரம்பித்த கூட்டம், இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் 41 பேர் அங்கம் வகிக்கிறார்கள். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம், எம்.பிக்கள் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் உள்ளக விவகாரங்கள், மற்றும் அரசியல் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. நாளை மறுதினம் கட்சி மாநாட்டில், அறிவிக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு உள்ளிட்ட விடயங்கள் உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

இன்று அப்பிராயம் கேட்கப்பட்டதால் பிரமுகர்களின் உரையெதுவும் இடம்பெறவில்லை.

இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை கிளைக்குள் இரண்டு அணிகள் உருவாகி மல்லுக்கட்டல் நடந்து வருகிறது. இந்த விடயமும் இன்று ஆராயப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here