வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா!

சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது அவரது காலில் அடிபட்டதாக செய்தி பரவியது. அதையடுத்து அனுஷ்கா சைலன்ஸ் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் உடனடியாக ஐதராபாத் திரும்பி விட்டதாகவும் ஒரு செய்திகள் வந்தன.

இந்த செய்தியை அனுஷ்கா மறுத்துள்ளார். சைலன்ஸ் படத்திற்காக அமெரிக்காவிற்கு வந்த இடத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாக பரவிய செய்தியில் துளியும் உண்மையில்லை. நான் இங்கு மிகவும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தினமும் சைலன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

பாகமதி படத்தில் நடித்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அனுஷ்கா மீண்டும் கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மாதவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹேமந்த் மதுக்கர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here