நாயுடன் மணப்பெண் நடனம்: வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் அதை கொண்டாடும் விதமாக தனது செல்ல நாயுடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல நாய் பயிற்சியாளரான சாரா கார்சன் டெவினிக்கு கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் நடைபெற்றது. திருமண நாளை கொண்டாடும் விதமாக 1980 களில் வெளியான பாடல் ஒன்றிற்கு அவர், தனது செல்ல நாயுடன் நடனமாடி உள்ளார்.

சாராவின் நடன அசைவுகளுக்கு ஏற்றாற் போல் அவரது செல்ல நாயும், ஹீரோ போன்று தாவி தாவி நடனம் ஆடி உள்ளது. இந்த வீடியோவை சாரா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை சாராவின் நண்பர்களும், குடும்பத்தினர்களும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வரை 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ மூலம் சாராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து டெய்லிமெயில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள சாரா, மிக நீண்ட திருமண உடையுடன் நடனமாடியது பதற்றமாக இருந்தது. நாங்கள் பல்வேறு சர்வதேச டிவி ஷோக்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம். ஆனால் இது நண்பர்கள், குடும்பத்தினர் கூடி இருந்த தனிப்பட்ட நிகழ்ச்சி. இதில் எடுக்கப்பட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here