கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு கோரிக்கை கதிர்காம கந்தனிடம் செல்கிறது!


கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை இன்று (28) ஆரம்பிக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று பிற்பகல் வடக்கு பிரதேச செயலக முன்பிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

மனிதனால் தீர்த்து வைக்க முடியாத விடயத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கேள்விக்குறியாகியுள்ள கிழக்கு தமிழர்களின் இருப்பை வலியுறுத்தி முற்போக்கு தமிழர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் யாத்திரிகள் வழியனுப்பும் வைபவத்தில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here