தயாசிறிக்கு மீளவும் அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தபோதும், தயாசிறி ஜயசேகர முன்னிலையாகியிருக்கவில்லை.

இதையடுத்து, அவரை பிரிதொரு தினத்தில் முன்னிலையாகும்படி தெரிவுக்குழு இன்று அறிவித்தது.

கடந்த ஜூன் 18ம் திகதி உரையாற்றிய தயாசிறி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்படவிருந்தபோதும், ஹோட்டலில் தங்கியிருந்த பிரமுகர் ஒருவரை கருத்தில் கொண்டே தாக்குதல் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தவே முன்னிலையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கப் போவதில்லையென தயாசிறி இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here