‘ப்ளீஸ்… அடுத்த முறை தேர்தலில் தலையிட்டு விடாதீர்கள்’:ரஷ்ய ஜனாதியுடன் ஜோக் அடித்த ட்ரம்ப்!

அடுத்த வருடம் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட வேண்டாம் என்று ட்ரம்ப் நகைச்சுவையாக ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் தெரிவித்திருக்கிறார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

அப்போது ட்ரம்ப் – புடின் பேச்சு வார்த்தைகளுக்கிடையே, “வரும் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டாம் என்று கண்டிப்பீர்களா?“ என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு ட்ரம்ப் நகைச்சுவையாக சிரித்து கொண்டே புடினிடம், ”பிளிஸ்.. தேர்தலில் தலையிடாதீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தொடர்பான மின்னஞ்சல்களை வெளியிட ரஷ்யா உதவியது, இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த ட்ரம்ப் வெற்றிக்கு உதவிபுரிந்ததாக அமெரிக்காவில் விசாரணையே நடந்து முடிந்துள்ளது.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here