கொட்டகலையில் தேசிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது!

தேசிய உணவு நுகர்வின் ஊடாக ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் பொருட்டு கொட்டகலையில் தேசிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மலையக பிரதேசத்தை சார்ந்த மக்களுக்கும் கொழும்பிலிருந்து அட்டன் வழியாக நுவரெலியா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் மாகாண விவசாய அமைச்சின் 50 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் கொட்டகலையில் தேசிய உணவு விற்பனை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், இ.தொ.காவின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர்கள், திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here