போதைக்கு எதிராக வவுனியாவில் அணி திரள்வு

போதைக்கு எதிராக வவுனியாவில் பலரும் அணி திரண்ட சம்பவம் இன்று இடம்பெற்றது.

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதையற்ற தேசம் என்ற நிகழ்வு இன்று காலை குருமன்காட்டு சந்தியில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சிந்தனையில் கடந்த ஒரு வாரகாலமாக போதைக்கு எதிரான நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்ததுடன், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலுன்களையும் பறக்கவிட்டிருந்தார்.

போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் போதைக்கு எதிரான வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை தாங்கிவாறு கவனயீர்ப்பு ஊர்வலமும் இடம்பெற்றிருந்தது.

குருமன்காட்டுச்சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுனியா சமூக சேவைகள் திணைக்களம் வரை சென்றடைந்து முடிவடைந்தது.
இதன்போது வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள், செட்டிகுளம் பிரதேச செயலளார், பாடசாலை அதிபர்கள், முதியோர் சங்க பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர் வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here