திருகோணமலையில் இடம்பெயர்ந்த 600 பயனாளிகளிற்கு வீட்டு உரிமைச்சான்றிதழ் வழங்கப்பட்டது!

யுத்தம் காரணமாக நாட்டுக்குள் இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்து நாடு திரும்பியவர்களுக்காக வீட்டு நன்கொடை உரிமைச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (27) திருகோணமலையில் இடம்பெற்றது.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ் இடம்பெயர்ந்தோருக்கான வீடு வழங்கும் 2வது கட்டத்துக்கான உரிமைச் சான்றிதழ்களே இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், கே.துரைரட்ணசிங்கம், இரான் விக்ரமரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, உதவி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீடுகள் தலா 10 இலட்சம் பெறுமதியானவை என்பதுடன், பிரதமர் அமைச்சால் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் கிருகோணமலையில் அமைக்கப்படும் 1000 வீடுகளில் ஒரு பகுதியே இந்த வீடுகளாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here