
வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் கிழக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்தி பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியன் ரூபா பெறுமதியிலான இந்த திட்டத்தின் கீழ் 850 கிலோமீற்றர் நீளமான வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கிறது.
நிர்மாண நிறுவனங்களுடனான ஒப்பந்தப்பணிகள் பூர்தியாகியுள்ளன. இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் பூர்த்தியாகும். பணி நிறைவடைந்த பின்னர் 5 வருடங்களிற்கு வீதி பராமரிப்பையும் அந்த நிறுவனமே மேற்கொள்ளும்.
சீன பின்னணியுடைய நிறுவனமொன்றே ஒப்பந்த பணியை ஏற்றுள்ளதாக தெரிகிறது.
Loading...
