தர்மசக்கர ஆடை விவகாரத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு அடுத்த பெப்ரவரியில்!

தர்மச்சக்கர வடிவம் பொறித்த ஆடை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட பெண் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு 2020 பெப்ரவரி 7ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 13 (1) பிரிவுகளை மீறும் வகையில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார்.

கொலொங்கொடாவில் வசிக்கும் அப்துல் ரஹீம் மசெய்னா என்ற பெண், மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர், அடிப்படை மனிதஉரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிரதிவாதிகளாக ஹசலகா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிட்டிருந்தனர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளாக புலஸ்தி ஹெவமண்ணா மற்றும் கவிந்து கீகனகே ஆகியோருடன் ஜனாதிபதி வழக்கறிஞர் ஜே.சி.வெலியமுனா முன்னிலையாகியிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here