தலாய் லாமா ஆவதென்றால் பெண்கள் அழகாக இருக்க வேண்டும்: தற்போதைய தலாய் லாமா தடாலடி கருத்து!

தலாய் லாமாவாக ஒரு பெண் தேர்வாவதென்றால், அவர் அழகானவராக இருக்க வேண்டும் என தற்போதைய தலாய் லாமா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்திய புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14 ஆவது புத்த மத தலைவராவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15 ஆவது புத்த மத தலைவரை அம்மதத்தினர் தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்ததாக ஒரு பெண் தலைவரை தலாய் லாமாவாக நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அவர், சமீபத்தில் பிபிசி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில், அடுத்த தலாய் லாமாவாக ஒரு பெண் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலாய் லாமா, “பெண் ஒருவர் தலாய் லாமாவாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அடுத்து ஒரு பெண் தலாய் லாமாவாக தேர்வு செய்யப்பட்டால் அவர் அழகானவராக இருக்க வேண்டும். அவர் அழகாக இல்லாவிட்டால், அவரை காண்பதற்கு பெரும்பாலானோர் விருப்பம் கொள்ள மாட்டார்கள்“ என தலாய் லாமா கூறினார்.

அப்படியென்றால் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணின் சிந்தனை அவசியமில்லையா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “இரண்டும் முக்கியம்” என தலாய் லாமா பதிலளித்தார்.

ஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியிலும், ஒரு பெண் அழகாக இருக்கும் வரை அவர் தலாய் லாமாவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here