ஏன் மரணதண்டனை?: ஐ.நா செயலாளரிற்கு விளக்கமளித்த மைத்திரி!

மரணதண்டனையை நிறைவேற்றும் தனது திட்டம் குறித்து ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரோசுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் இதனை தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதன்போது, மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தான் தீர்மானித்தமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காகவும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து இலங்கையின் எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்காகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எந்த தனிநபர் மீதான வெறுப்பு காரணமாகவும் கோபம் காரணமாகவும் நான் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் கைச்சாத்திடவில்லை நாட்டையும் எதிர்கால தலைiமுறையையும் காப்பாற்றுவதற்காகவே உத்தரவில் கைச்சாத்திட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here