முல்லைத்தீவு மாற்றுவலுவுள்ளவர்களிற்கான இனியவாழ்வு இல்ல நிர்வாகத்தில் அதிருப்தி: மாணவர்கள் உண்ணாவிரதம்!

மாற்றுத்திறனாளிகளிற்கான (விழி, செவிப்புல சிறப்பு தேவையுடையவர்கள்) முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தின் பழைய மாணவர்கள் இருவர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குறித்துள்ளனர்.

வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக இந்த உண்ணாவிரத போராட்டம்.நடைபெற்று வருகின்றது.

பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நிறுவனத்தின் உள்ளக குழப்பங்களினால் மாணவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள்,
1.நிறுவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்படவேண்டும்.
2. நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிறுவனம் ஒப்படைக்கப்படவேண்டும்.
3.நிர்வாக நிர்வாகச் செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பது நிறுத்த வேண்டும்.
4.பழைய மாணவர்களை நிபந்தனையற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்படவேண்டும்.
5.அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிறுத்த வேண்டும்.
6.சமூக சேவைத் திணைக்களத்தின் அரச ஊழியராக இருந்து கொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் இல்லத்தின் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும்.
7.மக்கள் பிரதிநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையிலிருந்து வெளியேறவேண்டும்.
8. 11 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்படவேண்டும்.
9.மேற்குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும் பழைய மாணவர்கள் இருவருமாக இணைந்து குழு அமைக்கப்பட வேண்டும்.
10. 6ஆம் இலக்கம் 7ஆம் இலக்கம் ஆகிய கோரிக்கைகள் உடனடியாக செயற்படுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலிறுத்தியுள்ளனர்.

இன்று காலையில், வள்ளிபுனம் காளிகோவிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக வந்து தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிற்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிர்வாகம் தான்தோன்றி தனமாக செயற்பட்டு வருகிறது. இல்லத்தின் ஆரம்பமுதல் அங்கே இருந்து கல்வி கற்று பட்டதாரிகளாக மாற்று வலுவுடைய 13 பேர் வெளியேறியுள்ள நிலையில் அவர்கள் எவரும் இல்லத்தின் செயற்பாடுகளில் உள்வாங்கபடவில்லை. ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்துகொண்டு இனிய வாழ்வு இல்லத்தில் மாற்று வலுவுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்யவென வந்தார். தற்போது அங்கும் ஊதியம் பெறும் பணியாளராக மாறியிருக்கின்றார்.

ஒரு நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த இல்லத்தில் சில அதிகாரம் படைத்தவர்கள் தான்தோன்றிதனமாக நடந்துகொள்கிறார்கள் என போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தினர்.

யுத்தகாலத்தின் போது, விழி, செவிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கான பராமரிப்பு கல்வி நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு விழிப்புலன் இழந்த மற்றுத்திறனாளியான கிறிஸ்து மாசிலாமணி என்பவரால் தன்னார்வ நிறுவனமாக உருவாக்கப்பட்டு, தமிழீழ விடுதலை புலிகளால் நிர்வகிக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் நிறுவனத்தின் செயற்பாடு பரவலான பாராட்டை பெற்றிருந்ததுடன், அங்கு கல்வி பயின்றவர்கள் சிறப்பான நலையையும் அடைந்தனர்.

2009 யுத்தம் முடிந்த பின்னர் இந்த இல்லத்தில் கல்வி கற்று பல்கலை கழக பட்டதாரிகளாக வெளியேறிய வெளியேறிய சிலரின் முயற்சியில் மீள உருவாக்கப்பட்டது. எனினும், தற்போது அவர்கள் புறந்தளள்ப்பட்டு, புதிய நிர்வாகமொன்று இயங்கி வருவதாக மாணவர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here