குளவிக்கொட்டால் 10 தொழிலாளர்கள் பாதிப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று (28) முற்பகல் 10 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 10 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 10 பேரும் பெண் தொழிலாளர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here