மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு அதிகாரியால் தாக்கப்பட்டதை கண்டித்து வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டத்தில், மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை கண்டிக்கின்றோம், மாகாண விவசாய பணிப்பாளரே நீதி வழங்குங்கள் என்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த உத்தியோகத்தர்கள், நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கணக்காய்வு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் எமது விவசாய பணிப்பாளர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இதற்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகஜரொன்றினையும் கையளித்திருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here