விபத்தால் மலையகத்தின் முக்கிய பகுதிகளில் 4 மணித்தியாலம் போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு துறைமுகத்திலிருந்து கினிகத்தேனை புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு 25 தொன் நிறையுடைய இரும்பு மற்றும் உபகரணங்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகொல்ல பகுதியில் பிரதான வீதியில் குடை சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக பொல்பிட்டிய, மினுவாந்தென, அங்ராபிட்டிய, லக்ஸபான – நோட்டன்பிரிட்ஜ் ஊடாக மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.

பொலிஸாரின் நடவடிக்கையினால் பெக்கோ இயந்திரத்தினை பயன்படுத்தி கனரக வாகனத்தை மீட்ட பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here