20 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்களுக்கு உரித்துப்படிவம்

வவுனியா நொச்சிமோட்டை பொது நோக்கு மண்டபத்தில் இன்று கிராம அலுவலகர் குபேரன் தலைமையில் வசதியற்ற குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சிந்திப்போம் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம் எனும் திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக சமுர்த்தி நிவாரணங்கள் பெற்றுக்கொள்ளாமலிருந்த குடும்பங்கள் மணிக்க இலுப்பக்குளம், நொச்சிமோட்டை, சாந்தசோலை, பேயாடிகூழாங்குளம் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 181 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தரும் நகரசபை உறுப்பினருமான எம்.ஆர்.எல்.லரீப்பினால் சமுர்த்தி நிவாரணம் உரித்துப்படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நொச்சிமோட்டை சுகாதாரப்பரிசோதகர், பொது அமைப்புக்கள், மாதர் அபிவிருத்திச்சங்கம் ,பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here