மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்து ஒருமாத கால அவகாசம் தேவை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்தில் புகையிரதத்தில் வரும் பெரும்பாலான பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பயணிகள் தெரிவித்ததோடு, இதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here