மரணதண்டனை கைதிகளின் எண்ணிக்கை 1261

தற்போது இலங்கை சிறைகளில் மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எண்ணிக்கை 1261 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 297 பேர் வெலிகட சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மரண தண்டனை கைதிகளில் 823 கைதிகள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இதில் 36 பெண்களும் அடங்குவர்.

எஞ்சிய 438 மரண தண்டனை கைதிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

மரணதண்டனைக்காக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 18 கைதிகளின் பட்டியலில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யாத கைதிகளே உள்ளடங்குவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here