கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை செர்ந்த செல்லையா பிரபாகரன் (27) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து காக்காகடை சந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளானவர் பின்புறமாக பார்த்தவாறு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here