கள்ளக்காதலை நேரில் கொண்டதால் மாமியாரை கொன்ற மருமகள்: கொலையை மறைக்க மகனும் நாடகம்!

கம்பளை ராஜ எல பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டதை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர். பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையைடுத்து, இறந்த மூதாட்டியின் மருமகளே இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. கொலை நடந்ததை அறிந்த மூதாட்டியின் கணவன் அதை மறைக்க நாடகம் ஆடியதும் அம்பலமாகியுள்ளது.

கம்பளை நீதவான் நீதிமன்றில் நேற்று பொலிசார் இந்த விபரங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து, கைதாகியுள்ள 24 வயதான மதுஷா டிலஹனி (குருந்தவத்த) என்ற இளம்பெண்ணையும், சமிந்த சரத்குமார என்ற அவரது கணவனையும் அடுத்த மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் நீதிவான் ஸ்ரீநித் விஜேசேகர.

மதுஷாவின் கள்ள உறவை நேரில் கண்டதாலேயே 72 வயதான மூதாட்டி கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி வதுஹாண்டிகே அட்லைன் பெர்னாண்டோ (72) என்ற மூதாட்டி வீட்டு கூரையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரேதத்தை மீட்ட பொலிசார், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் போது, மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவிக்கப்பட்டதையடுத்து, கம்பளை சினமன்கார்டன பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்படி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன.

24வயதான மதுஷா டிலஹனிக்கு 8,4 வயதுகள் மற்றும் 6 மாதமுடைய 3 குழந்தைகள் இருந்தனர். கணவர் கொழும்பில் பணிபுரிந்து வந்தார். மூன்று அல்லது நான்கு வாரங்களிற்கு ஒரு முறையே வீட்டிற்கு வந்தார்.

8 வயதுடைய மகள் முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வந்தார். முச்சக்கரவண்டி சாரதியான 40 வயது நபருடன் மதுஷா டிலஹனிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரங்களில் மதுஷா டிலஹனியின் வீட்டில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

கடந்த 21ம் திகதி காலை 10 மணிக்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, அந்த வீட்டிற்கு கணவனின் தாயாரான 72 வயது மூதாட்டி வந்து விட்டார். அவர்கள் இருவரின் கள்ளக்காதலையும் நேரில் பார்த்து அதிர்ந்தார்.

மாமியாரை கொல்லும்படி மதுஷா கூறியபோது, கள்ளக்காதலன் அந்த அறையிலிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து துணியொன்றால் மாமியாரின் முகத்தை இறுக அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் இறந்தார்.

பின்னர் அவரது கணவரை தொடர்பு கொண்டு, மாமியாரை- கணவரின் தாயார்- கொன்றதை குறிப்பிட்டு, கணவர் உடனடியாக வராவிட்டால் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். இதையடுத்து இன்றிரவு அவர் அவசரமாக வீட்டிற்கு திரும்பினார்.

சேலையொன்றை எடுத்து இறந்தவரின் கழுத்தில் கட்டி, அவர் தற்கொலை செய்து கொண்டதை போல வீட்டுக்கூரையில் இருவரும் தொங்க விட்டனர். தனது தாயென்றும் பாராமல், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மகனின் செயலால் பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

அன்றிரவு இருவரும் ஒன்றாக இரவை கழித்தனர். மறுநாள் கணவர் புறப்பட்டு சென்ற பின்னர், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி மதுஷாவே, தற்கொலை நாடகத்தை ஆடினார்.

அதற்கு பின்னர்தான் மரண செய்தியை அறிந்ததை போல நாடகம் ஆடிய கணவன், வீட்டுக்கு திரும்பி 26ம் திகதி இறுதிச்சடங்கு செய்தனர். இறுதிச்சடங்கு முடிந்த அன்றே கணவனும், மனைவியும் கைதாகினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here