இந்தியா வெற்றி!

உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

மான்செஸ்டரின் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதின.

‘ரொஸ்’ வென்ற இந்திய அணி கப்டன் கோஹ்லி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கோலி 72 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி துவக்கத்திலேயே திணறியது. கெய்ல் (6), ஹோப் (5) இருவரும், முகமது ஷமி வேகத்தில் வீழ்ந்தனர்.

அம்ரிஸ் (31), பூரன் (28), கப்டன் ஹோல்டர் (6) நீடிக்கவில்லை. பும்ரா வீசிய 27 வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் பிராத்வைட் (1), ஆலன் (0) சிக்கினர். ஹெட்மயர் 18 ரன் எடுத்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி 34.2 ஓவரில் 143 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 125 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. முகமது ஷமி 4 விக்கெட் சாய்த்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here