கதிர்காம யாத்திரைக்காக காட்டுப்பாதை திறந்து விடப்பட்டது!

கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்காக குமண யால தேசிய சரணாலய காட்டுவழிப்பாதை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது ஜூலை 09 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது.

நேற்று காலை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக வலுவூட்டல், இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் குமண யால சரணாலய காட்டுப்பாதை பாதயாத்திரைக்காக திறந்துவிடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் சிறில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டின் பல பகுதியிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான அடியார்கள், பாதயாத்திரையை கதிர்காமம் நோக்கி ஆரம்பித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here