பூண்டுலோயாவில் நடமாடும் சேவை ஆளுனரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரில் இன்றைய தினம் நடமாடும் சேவை கொத்மலை பிரதேச சபை தவிசாளர் சுசந்த தலைமையில் மத்தியமாகாண ஆளுனர் மைத்ரி குணரத்னவின் விசேட பங்குபற்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கொத்மலை பிரதே சபைக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.இந்நடமாடும் சேவையின் போது பல சேவைகள் வழங்கிவைக்கப்பட்டது அந்தவகையில் மூக்கு கண்ணாடி பெற்றுக்கொடுத்தல்,வைத்திய உதவிகள் மற்றும் பரிசோதனைகள்,திருமண பதிவுச்சான்றிதல், முதியோர் ஊதியம் சம்பந்தமான விடயங்கள்,ஊனமுற்றவர்களின் பிரச்சனைகள், போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வேலைத்திட்டம்,வேலையற்ற பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்,தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதி பத்திரம்,வெளிநாட்டு கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைத்தல்,கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளை அமைப்பதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்தல் போன்றவைகள் இந்நடமாடும்சேவைகளூடாக பெற்றுக்கொடுக்கப்பட்டது இந்நிகழ்வின் போது கொத்மலை பிரதேச சபையின் தலைவர் உட்பட பிரதே சபை உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

-நீலமேகம் பிரசாந்த்-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here