1119 தொண்டர் ஆசிரியர்களிற்கு நிரந்தர நியமனம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலையில் நடைபெற்றது.

திருகோணமலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 739 தொண்டர் ஆசிரியர்களும், வடக்கு மாகாணத்தை சேர்ந்த 380 தொண்டர் ஆசிரியர்களுக்குமாக 1119 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மகரூப், எம்.எஸ். தௌபீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here