ஆடை தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2019.05.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று (26) புதிய சுற்றறிக்கை அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு குறிப்பிட்டு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேலை அல்லது ஓசரி, அல்லது அரச சேவையின் கௌரவத்தை காக்கும் ஆடையை பெண்கள் அணிய வேண்டுமென்றும், ஆண்கள் நீளக்காற்சட்டை, மேற்சட்டை அல்லது தேசிய ஆடை அணிய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here