விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு தேனீர் விருந்து!

dig

ஜி -20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்லும் வழியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராம்போஷா இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் குறுகிய சந்திப்பில் ஈடுபட்டார்.

தென்னாப்பிரிக்க விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க ஆகியோர் தென்னாபிரிக்க ஜனாதிபதி தலைமையிலான குழுவை வரவேற்றனர். சுமார் 2 மணிநேரம் விமான நிலையத்தில் தென்னாபிரிக்கா ஜனாதிபதி குழுவினர் தங்கியிருந்தனர். பிரதமர் ரணில் வழங்கிய தேனீர் விருந்திலும் கலந்து கொண்டார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விமானம் கட்டுநாயக்கவில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு, மதியம் 12.30 மணியளவில் ஜப்பானின் ஒசாகாவுக்கு புறப்பட்டது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here