வாய்த்தர்க்கம் முற்றி மனைவியை குத்திக் கொன்ற யாழ்ப்பாண கணவன்!

குடும்ப தகராறு காணரமாக கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான மனைவி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவன் தலைமறைவாகி விட்டார்.

யாழ்ப்பாணம் குருநகர் சென்றொக் வாசிகசாலைக்கு அருகாமையில் இன்று (27) நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்பதியர்களிற்கிடையில் தினமும் வாய்த்தர்க்கம் இடம்பெறுவது வழக்கமென அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவனால் மனைவி தாக்கப்படுவதுமுண்டு. இன்றும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மோதல் முற்றி, கத்தியால் மனைவியின் வயிற்றில் குத்தியுள்ளார்.

தாக்குதலை நடத்தி விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய கணவன் தலைமறைவாகியுள்ளார்.

மனைவியின் அவலக்குரலை கேட்ட அயலவர்கள், அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here