லொஸ்லியாவுடன் இன்று வாயை மூடி பேசவுள்ள கவின்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 சீசன் வெற்றிகரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த சண்டைக் காட்சிகளும் நேற்று முதல் தொடங்கி ஆட்டம் சூடு பிடித்துள்ளது. புதுசாக வீட்டிற்குள் நுழைந்த மீராவை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் டார்கெட் செய்வது போல் நடந்து கொள்கின்றனர்.

நேற்றைய முதல் பிக் பாஸ் டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நேற்று மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மா அவர்களின் வாழ்க்கையில் நடந்த மிகவும் கசப்பான அனுபத்தை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் கதையைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்தனர்.

இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ்க்கு இன்றைக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கின் பெயர் வாயை மூடி பேசவும் என்று வெய்துள்ளனர். இதில் முதல் ஆளாக மாட்டிக்கொண்டது கவின். பொதுவாகக் கவின் பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் பிடித்த போட்டியாளர். அதுவும் பெண்கள் மிகவும் பிடித்தமான நபர். எப்போதும் இவர் பெண்களின் அருகிலேயே தான் உள்ளார் என்று சிலர் கூறுகின்றனர்.

தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கவின் தன் பெண் தோழிகளிடமிருந்து ஒதுங்கி, செய்கைகை மூலமாகப் பேசவேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர். மேலும் அந்த லிஸ்டில் அபிராமி, லொஸ்லியா, சாக்ஷி பெயர்களுடன் வனிதா பெயரும் இருக்க, எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் இன்றைய நாள் சிரிப்புடன் தொடங்குவது போல் தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here