வவுனியாவில் இராணுவத்தினரின் சோதனை சாவடி அகற்றம்

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இரானுவத்தினரால் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கடும் சோதனைக்குட்படுத்தி வந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து இன்று (27) காலை இவ் சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டு தளங்கள் மற்றும் பேருந்து நிலையம், வங்கிகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து வன்னி பிராந்திய இரானுவ பொருப்பாளரின் உத்தரவின் பேரில் வவுனியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது .

தற்போது நாட்டில் சீரான நிலை காணப்படுவதினால் சோதனைச்சாவடிகளை அகற்றுமாறு எமக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் இவற்றினை அகற்றுவதாக சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரானுவ சிப்பாய் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here