அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றியவர்கள் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்ட இருவரை இன்று காலையில் கைது செய்ததுடன் இரு உழவு இயந்திரங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆட்டுக்கட்டு ஆற்றில் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை காலையில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையையை மேற்கொண்ட போது அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் இரு உழவு இயந்திரத்தை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்ப்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here