அநுர சேனநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

ரக்பி வீரர் வாசிம் தாஜூடீன் கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்து குற்றச்சாட்டில், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிற்கு  எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை 20 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணையை மேல் நீதிமன்றத்தின் பிணையாக ஏற்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் பிரதிவாதியின் விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு அறிக்கை சமர்பிப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ம் திகதி விசாரிப்பதற்கும், நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா உள்ளிட்ட 06 சாட்சியாளர்களுக்கு ​ நோட்டீஸ் அனுப்புவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here