பிரதமர் பதவி ஒரு கட்சிக்கு, ஜனாதிபதி பதவி ஒரு கட்சிக்கு!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் வேறு சில கட்சிகளுடன் வெகு விரைவில் கூட்டணி வைத்துக் கொள்ளும் என காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (26) நடந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நயவஞ்சகர்கள் இதை விரும்புவதில்லை. சில வாரங்களுக்குள் நாங்கள் சுதந்திரக்கட்சி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன முன்னணியுடன் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவோம். இது நாட்டில் பெரிய அரசியல் கட்சியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இரு கட்சிகளும் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திப்பதை பற்றி பேசுகிறோம். ஒரு கட்சிக்கு பிரதமர், மற்ற கட்சிக்கு ஜனாதிபதி பதவி என்பதுதான் பொருத்தமான தீர்வாக இருக்கும். இல்லையெனில் இரு கட்சிகளுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக செயற்பட முடியாது. ஜனாதிபதி பதவியை ஒரு கட்சியும், பிரதமர் பதவியை மற்ற கட்சி ஏற்க வேண்டும். அதுதான் கூட்டணி“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here