புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டியவர்கள் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண் ஒருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் அந்த பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட காணி உரிமையாளர், பெண் ஒருவர் அடங்கலாக 14 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ள, மாத்தளை, சாவகச்சேரி, கலேவெல போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் 3, ஸ்கானர், கமெரா உள்ளடங்கலாக பொருட்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் புதுக்குடியிருப்பு பொலிஸார், இவர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here