நீதிமன்றில் முன்னிலையாக சத்துரிக்காவிற்கு அழைப்பாணை!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகள் சதுரிக்கா சிறிசேனவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி புலனாய்வு பணியகம் சம்பவம்ஒன்று தொடர்பாக செய்த வழக்கு பதிவு விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நபர்கள் வங்கிக்கடனை பெற ஆவணம் சமர்ப்பித்த விவகாரத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

ரேணுகா ரன்வாலா ஆராய்ச்சி மற்றும் கோஷிகா விமுக்தி கரியவாசம் ஆகிய இருவரே கடனாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இரண்டு முறை குறிப்பிட்டும் சத்துரிகா முன்னிலையாகவில்லை. இதையடுத்தே செப்ரெம்பர் 25ம் திகதி முன்னிலையாகும்படி அவருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here