விம்பிள்டன் தரவரிசையில் பெடரருக்கு 2ம் இடம்!

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 1ம் திகதி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 8 முறை சம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருந்தாலும் ‘புல்தரை’ போட்டிகளில் சிறப்பாக ஆடியிருப்பதால் அதன் அடிப்படையில் விம்பிள்டன் போட்டிக்கான தரநிலையில் 2வது இடத்தை பெற்றுள்ளார். ரபெல் நடாலுக்கு (ஸ்பெயின்) 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் பிரிவில் முதல் இரு இடங்களில் முறையே ஆஷ்லி பார்டி (அவுஸ்திரேலியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) இருக்கிறார்கள். அமெரிக்க சாதனை மங்கை செரீனா வில்லியம்சுக்கு 1வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here