திரும்பவும் எழுதப்படும் 1992ம் ஆண்டு வரலாறு: நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

உலகக்கிண்ண போட்டிகளின் 1992ஆம் ஆண்டு சம்பவங்கள், இம்மியும் பிசகாமல் அப்படியே பாகிஸ்தானிற்கு நடந்து வருகிறது. இன்றும் அதுதான் நடந்தது. பேர்மிங்ஹாமில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, அரையிறுதி கனவை மேலும் வலுப்படுத்தியுள்ளது பாகிஸ்தான்.

இன்றைய ஆட்டத்தில் பாபர் ஆசத்தில் அசத்தல் சதம், ஷஹீன் அப்ரியின் பந்து வீச்சு எழுச்சியால் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது பாகிஸ்தான்.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நியூசிலாந்து, பாகிஸ்தானின் ஆக்ரோச பந்து வீச்சிற்கு மளமளவென விக்கெட்டை இழந்தது. ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய ஆமீர், மார்ட்டின் குப்திலை வீழ்த்தி சரிவை தொடக்கி வைத்தார். அதன்பின் மேலும் 3 விக்கெட், ஷாஹீன் அப்ரியின் பந்துவீச்சு எழுச்சியில் வீழ்ந்தது.

ஒரு முனையில் நன்றாக ஆடி வந்த கேன் வில்லியம்சன், 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்த போது அணயின் ஸ்கோர் 83. 150 வரையாவது நியூசிலாந்து வருமா என்ற கேள்வி வந்தபோது, நீசம்- கிராண்ட்ஹோம் ஜோடிஅணியை தூக்கி நிறுத்தியது. 6 விக்கெட்டிற்கு இவர்கள் 132 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். கிராண்ட்ஹோம் 64 ரன்னில் வீழ்ந்தார். நீசம் ஆட்டமிழக்காமல் 97.

50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டிற்கு 237 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது. ஷஹீன் அப்ரிடி 28 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.

பதிலளித்து ஆடிய பாகிஸ்தானின் தொடக்கவீரர் பக்ஹர் சமான் 9 ஓட்டத்திவ் வீழ்ந்தார். இமாம் உல் ஹக் 19, மொஹமட் ஹபீஸ் 32 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

3ம் இலக்க வீரர் பாபர் ஆசம், தான் ஒரு துடுப்பாட்ட மேதையென்பதை நிரூபித்தார். அப்பழுக்கற்ற இன்னிங்ஸ் ஒன்றை ஆடி சதம் அடித்தார். அவருடன் கூடு்டணி அமைத்த, கடந்த போட்டியின் நாயகன் ஹரிஸ் சோஹைல் அரைச்சதமடித்தார்.

பாபர் இந்த போட்டியில் 3000 ஓட்ட மைல்கல்லை கடந்தார். இதை விரைவாக கடந்த 2வது வீரர் அவர்.

வெற்றிக்கு 2 ஓட்டம் தேவையென்ற நிலையில், 68 ஓட்டங்களுடன் (76 பந்துகளில் 5 பெண்டரி, 2 சிக்சர்) ஹரீஸ் சொஹைல் ரன் அவுட் ஆனார். 49.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது பாகிஸ்தான்.

127 பந்தில் 11 பௌண்டரியுடன் 101 ஓட்டங்களுடன் பாபர் ஆசமும், சர்பராஸ் அஹமட் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here