விவியன் ரிச்சர்ட்ஸை கடந்த பாபர் ஆசம்!

ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை வேகமாக குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் ஆசம்.

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டினார். 68வது இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டினார்.

தென்னாபிரிக்காவின் ஹாசிம் அம்லா 57 இன்னிங்ஸில் 3000 ஓட்டங்களை குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதிவேக 3000 ஓட்ட வீரர்களில், பாபர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 69 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here