பயிற்சியை பூர்த்தி செய்துள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு வெகு விரைவில் முழுமையான சம்பளம்

பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளருக்கான சம்பளத்தை முழுமையாக வெகுசீக்கிரத்தில் வழங்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு கல்வியமைச்சில் கொட்டக்கலை அரசினர் கலாச்சாலை ஆசிரியர் பேரவை அங்கத்தவர்களின் சந்திப்பின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு தொடக்கம் 6 கட்டமாக வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளருக்கான சம்பளம் இன்றுவரையில் 10,000 மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு முழுமையான சம்பள வழங்க மாகாண ஆளுனர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு பயிற்ச்சியை அரசினர் கலாசாலைகளில் பயின்று வருபவர்களுக்கும் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நீலமேகம் பிரசாந்த்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here