ஜோதிகாவை பேச வைத்த எழுத்தாளர்!

சினிமா பட விழாவில், ‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பாக பேசினார். “மாணவர்களுக்கு முதலில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஜோதிகா கதை நாயகியாக நடித்து, புது டைரக்டர் கவுதம் ராஜ் டைரக்டு செய்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

அப்போது ஜோதிகா பேசியதாவது:-

“இது, அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பற்றிய கதை. இதேபோன்ற கதைகளுடன் ஏற்கனவே ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ ஆகிய படங்கள் வந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள். இதுபோன்ற நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட நூறு படங்கள் வந்தாலும் பரவாயில்லை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் வருவது நல்ல விஷயம்தான்.

நிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், ‘நீட்’ தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும். இதைத்தான் ‘ராட்சசி’ படத்தில் சொல்லி இருக்கிறோம்.

நான் இங்கே புது டைரக்டர்கள் பற்றி சொல்லியாக வேண்டும். ஏனென்றால், அடுத்தும் ஒரு புது டைரக்டரின் படத்தில் நடிக்க இருக்கிறேன். புது டைரக்டர்கள் தெளிவாக கதை சொல்கிறார்கள். இந்த படத்தின் டைரக்டர் கவுதம் ராஜுவும் அந்த வரிசையில் இருக்கிறார். என்னை ஒல்லியாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர் கோகுல், ரொம்ப சிரமப்பட்டார்.

பாரதிதம்பி

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்கள், சமீபகாலமாக அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். ஒரு அம்மாவாகவும், நடிகையாகவும் நான் என் கடமைகளை சரியாக செய்து வருகிறேன். இந்த படத்தில், பூர்ணிமா பாக்யராஜ் சக ஆசிரியையாக நடித்து இருக்கிறார். அவருக்கு என் நன்றி.” என்றார்.

இந்த படத்திற்கு எழுத்தாளர் பாரதிதம்பி வசனம் எழுதியிருக்கிறார். சமூக விசயங்களில் அக்கறையுடன் செயற்படும் பாரதி தம்பியின் அனல் பறக்கும் வசனங்கள் படத்திலுள்ளதாம். பாரதிதம்பியின் வசனங்களை படித்த பின்னரே, ஜோதிகா இந்த விடயத்தில் கூடுதல் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here