வழக்கிற்கு பயந்து பூசகர் வீட்டில் ஒளிந்தார்களாம்!

வவுனியாவில் காணாமல் போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு

நெடுங்கேணி நையினாமடு பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு வவுனியா சென்ற இரு சகோதரர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது தந்தையார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று முற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு, முள்ளியவளைப்பகுதியில் பூசகர் ஒருவர் சட்டத்தரணியினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சகோதரர்கள் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பேருந்தில் நெடுங்கேணியிலிருந்து வவுனியா வந்தபோது காணாமல் போயுள்ளதாக தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு சகோதரர்களும் கடந்த 7 நாட்களாக முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலுள்ள பூசகர் ஒருவருடன் வசித்து வந்துள்ளதாகவும் இன்றைய தினம் சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தமது வழக்கு விசாரணைகளுக்கு பயந்தே இவ்வாறு ஒளிந்து கொண்டுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் தந்தையான விஜயசுந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here