ஜனாதிபதியின் போதைப்பொருள் வேட்டை: ரிசல்ட் என்ன தெரியுமா?

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்பபட்ட 20,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 1029 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஹெரோயின் இந்த ஆண்டிலேயே பதிவாகியுள்ளது.

அத்துடன் முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை மிக அதிகமாகவுள்ளது.

போதைப்பொருளுக்கு எதிரான வேட்டையில் ஜனாதிபதி அதிக முன்னுரிமை கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here