சந்திவெளி விபத்தில் இளைஞன் பலி!

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளிலும் மோதி இந்த விபத்து நேர்ந்தது.

தனியார் பேருந்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென திருப்பியபோது, பின்னால் வந்த பேருந்து மோதியதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சுதன்,வியோயன் (15) என்ற இளைஞர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதன் உயிரிழந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here