போதைக்கு எதிராக யாழில் பரவலாக விழிப்புணர்வு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சாவகச்சேரி

பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதன், பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், சாவகச்சேரி மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக முன்பாக பேரணி ஆரம்பித்து ஏ 9 முதன்மைச் சாலை வழியாக சாவகச்சேரி பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து சாவகச்சேரி நகரசபை பொது விளையாட்டு மைதானம் வரை பேரணி சென்றது. பேரணியுடன் போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளுடன் பெருமளவு வாகனங்களும் பங்குபற்றின.

அங்கு பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி, சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் உரையாற்றினர்.

பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி அலுவலர்களின் போதையினால் எற்படும் விளைவுகள் தொடர்பான நாடகமும் இடம்பெற்றது.

நல்லூர்

நல்லூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முத்திரை சந்தி வரை நடைபவனி இடம்பெற்றது. போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

கரவெட்டி

கரவெட்டி பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரகுநாதன் ரஞ்சினி தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு நிகழ்வில் விழிப்புணர்வு நாடக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here